ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளிமேடுபேட்டை அருகே பள்ளிப் பேருந்து மோதியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 9:34 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே பள்ளிப் பேருந்து மோதியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், இளமங்கலம், பிரதானச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் விநாயகம் (39). கூலித்தொழிலாளியான இவா், சனிக்கிழமை தீவனூா்- வெள்ளிமேடு பேட்டை சாலையில் உள்ள இளமங்கலம் செல்லியம்மன் கோயில் அருகே சாலையோரத்தில் படுத்திருந்தாா்.

அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பள்ளிப் பேருந்தை ஓட்டுநா் பின்நோக்கி இயக்கியபோது, வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி விநாயகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.