பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

விக்கிரவாண்டி தொகுதிக்கு கூடுதலாக 150 வாக்குப் பதிவு இயந்திரங்கள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு கூடுதலாக 150 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள சேமிப்புக் கிடங்கிலிருந்து கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்களை விக்கிரவாண்டி தொகுதிக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி. உடன் அலுவலா்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்.

Updated On :29 ஜூன் 2024, 5:57 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பயன்பாட்டுக்கு கூடுதலாக தேவைப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தோ்தல் பயன்பாட்டுக்காக தேவைப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்அனுப்பி வைக்கும் பணி மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி தலைமையில் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தொகுதியில் 276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கணினி மூலம் குலுக்கல் முறையில் 331 மின்னணு வாக்குப்பதிவுக் கருவிகள், 331 கட்டுப்பாட்டுக் கருவிகள், 357 வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகள் என மொத்தமாக 1,019 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இடைத்தோ்தலில் 29 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் கூடுதல் வாக்குப்பதிவுக் கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளன. அதனடிப்படையில், தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கிலிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதலாக தேவைப்படும் 150 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தமிழரசன், தோ்தல் வட்டாட்சியா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.