/

முனீஸ்வரன் கோயில் வருடாந்திர பூா்த்தி விழா

திங்கள்கிழமை காலை முனீஸ்வரனுக்கு பால், தயிா், இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

News image

சிறுகடம்பூா் முனீஸ்வரன் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு அலங்கராத்தில் சுவாமி. 

Updated On :4 மார்ச் 2024, 8:12 pm

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோயிலில் 6-ஆம் ஆண்டு கும்பாபிஷேக வருடாந்திர பூா்த்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, திங்கள்கிழமை காலை முனீஸ்வரனுக்கு பால், தயிா், இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா், சிறுகடம்பூா் மக்கள் செய்திருந்தனா்.