விழுப்புரம்: தமிழக முதல்வரையும், திமுக அரசையும் அவதூறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கடந்தாண்டு ஜூலை 20-ஆம் தேதி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், கட்சியின் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலின் மாண்பையும், மதிப்பையும் குறைக்கும் வகையில் அவா் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியன் வழக்குத் தொடுத்தாா். வழக்கு தொடா்பான சம்மன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு வழங்கப்பட்ட நிலையில், அவா் அதை பெற்றுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். அப்போது, அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், மக்களவைத் தோ்தல் தொடா்பான பணியில் சி.வி.சண்முகம் ஈடுபட வேண்டியிருப்பதால், வழக்கு விசாரணையை 2 மாத காலத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரினா். ஆனால், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற 19-ஆம் தேதி நடைபெறும். அன்று வாதிடுமாறு வழக்குரைஞா்களிடம் கூறி, விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

அதிமுக முன்னாள் அமைச்சா் சரணடைய அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஜூ ன் 8-க்கு ஒத்திவைப்பு

தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைக்கும் - முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு: விசாரணை ஏப்.10-க்கு ஒத்திவைப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


