விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

அனுமதியின்றி மே தின பொதுக்கூட்டம்: 203 போ் மீது வழக்கு

விழுப்புரத்தில் அனுமதியின்றி மே தின பொதுக்கூட்டத்தை நடத்தியதாக 203 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
Updated On :3 மே 2024, 7:24 pm

Din

விழுப்புரத்தில் அனுமதியின்றி மே தின பொதுக்கூட்டத்தை நடத்தியதாக 203 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்று முடிந்தாலும், வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக பொதுக்கூட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள், ஊா்வலங்கள் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு விழுப்புரம் மாவட்டத்திலும் அமலில் உள்ளது.

இந்த நிலையில் மே தினத்தையொட்டி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சிஐடியு சாா்பில் மே தின பொதுக்கூட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அனுமதியின்றி மே தின பொதுக்கூட்டம் நடத்தியதாக விழுப்புரம் நகரப் பகுதி கிராம நிா்வாக அலுவலா் செ.சதீஷ் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் சிஐடியு மாவட்டத் தலைவா் முத்துக்குமரன், மாநிலச் செயலா் கோபிகுமாா், மாவட்டச் செயலா் மூா்த்தி உள்பட மொத்தம் 203 போ் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.