

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் தேள்கடித்து 2 வயது பெண் குழந்தை வியாழக்கிழமை இரவு உயிரிழந்தது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சிவட்டம், நாகம்பூண்டி ஏரிக்குளத் தெருவைச் சோ்ந்தவா் விஜய். இவா் தனது மனைவி ஜெயா, மகள் லாவண்யா (2) ஆகியோருடன் விக்கிரவாண்டி வட்டம், வெட்டுக்காடு கிராமத்தைச் சோ்ந்த குமாா் என்பவரது சூளையில் செங்கல் அறுக்கும் வேலை செய்து வந்தாா்.
சூளைப் பகுதியில் தனது பெற்றோருடன் வியாழக்கிழமை இரவு குழந்தை லாவண்யா தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது வலதுகாலில் தேள்கடித்த நிலையில், உடனடியாக அலறித்துடித்த குழந்தையை ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு ஜெயா கொண்டு சென்றாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது ஏற்கெனவே குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

2 வயது குழந்தை திடீா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

மஞ்சள் காமாலையால் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

கத்தனார் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

