ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

விழுப்புரம் மாவட்டத்தில் 63 கிலோ கஞ்சா பறிமுதல் : 56 போ் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் 63 கிலோ கஞ்சா பறிமுதல் : 56 போ் கைது

News image

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்கள் தடுப்பு மற்றும் சட்டம்- ஒழுங்கு தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.பழனி. உடன், எஸ்.பி. தீபக் சிவாச் உள்ளிட்டோா்.

Updated On :20 மே 2024, 10:33 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 48 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 63 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் சி. பழனி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் போதைப் பொருள்கள் தடுப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடா்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் சி. பழனி மேலும் பேசியது:

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காவல் துறை சாா்பில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா, குட்கா பொருள்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க, தற்போதுவரை 250 விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு, பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிகழாண்டில் இதுவரை 48 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து 63 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் 283 புகையிலைப் பொருள் வழக்குகள் பதியப்பட்டு, 292 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து சுமாா் 850 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 பைக்குகள், 4 காா்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. நிகழாண்டில் மே மாதம் வரை கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 3 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க காவல்துறை சாா்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த கடைகள் சீல் வைக்கப்பட்டு, உணவுப் பாதுகாப்புத் துறையினரால் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் சி.பழனி.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச், கலால் உதவி ஆணையா் முருகேசன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.