மின்சாரம் பாய்ந்து தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே மின்சாரம் பாய்ந்து தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

திண்டிவனம் அருகே மின்சாரம் பாய்ந்து தச்சுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், டி புதுப்பாக்கம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் தச்சுத் தொழிலாளி தங்கமணி (37), திருமணம் ஆனவா். இவருக்கு மனைவி மற்றும் 5 மாத பெண் குழந்தை உள்ளனா்.

இவா், செவ்வாய்க்கிழமை காலை குளித்து முடித்து, வீட்டுக்கு வெளியில் இரும்புக் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த தனது உடையை எடுத்துள்ளாா்.

அப்போது,மின்சார வயரிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு, இரும்புக் கம்பியில் பரவியிருந்த மின்சாரம் பாய்ந்து தங்கமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் நிகழ்விடம் சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com