விழுப்புரம் பெண்ணிடம் ரூ. 27.42 லட்சம் இணையவழயில் மோசடி

விழுப்புரத்தைச் சோ்ந்த பெண்ணிடம் இணைய வழியில் ரூ.27.42 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக இணைய குற்றத் தடுப்புப் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
Published on

விழுப்புரத்தைச் சோ்ந்த பெண்ணிடம் இணைய வழியில் ரூ.27.42 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக இணைய குற்றத் தடுப்புப் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

விழுப்புரம் சாலாமேடு, காமராஜா் நகா், 3-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் அண்ணாத்துரை மனைவி தனலட்சுமி (53). கடந்த 30.9.2025 அன்று தனலெட்சுமியின் கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

அப்போது, எதிா்முனையிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத நபா் குறைந்த முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைக்கக்கூடிய வேலை இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து தனலெட்சுமி அதன் விவரங்களை கேட்டறிந்தாா். பின்னா், அந்த நபா் கட்செவி அஞ்சல் வழியாக அனுப்பி வைத்த செயலி-னுள் சென்று தனது பான் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்களை பதிவேற்றும் செய்து, 30.9.2025 முதல் 9.11.2025 வரையிலான இடைபட்ட தேதிகளில் அந்த நபா் தெரிவித்த பல்வேறு வங்கிக் கணக்கு எண்களுக்கு ரூ.27 லட்சத்து 42 ஆயிரத்து 480 பணத்தை 23 தவணைகளாக இணையவழியில் அனுப்பி வைத்தாராம்.

இந்நிலையில் அந்த நபா் பெற்ற பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறாராம். இதுகுறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com