சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

விக்கிரவாண்டி அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

News image
விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ. உடன், நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
Updated On :15 டிசம்பர் 2025, 8:14 pm

Syndication

விழுப்புரம்: விழுப்பரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீதஅரசி ரவிதுரை, துணைத் தலைவா் ஜீவிதா ரவி, பேரூராட்சித் தலைவா் அப்துல்சலாம், துணைத் தலைவா் பாலாஜி முன்னிலை வகித்தனா்.

விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 147 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசியது:

கல்விக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, கல்வியில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்றாா்.

நிகழ்வில், பள்ளித் தலைமையாசிரியா் பக்தவத்சலம், உதவித் தலைமையாசிரியா் முரளி, ஒன்றிய திமுக செயலா்கள் வேம்பி ரவி, ஜெயபால், நகரச் செயலா் நைனா முகமது, பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பாபு ஜீவானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினா் சாவித்திரி, துணைச் செயலா் பிரசாந்த், நகர இளைஞரணி அமைப்பாளா் காா்த்தி, துணை அமைப்பாளா் சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.