ஜெயங்கொண்டானில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.
ஜெயங்கொண்டானில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.

ஜெயங்கொண்டானில் இலவச கண் பரிசோதனை முகாம்

செஞ்சி அருகேயுள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
Published on

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டான் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி சுப்பிரமணி தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் முகாமுக்கு வந்த 250 பேருக்கு கண் பரிசோதனை செய்தனா்.

ஏற்பாடுகளை அன்னை அறக்கட்டளை, அன்னை ரத்த பரிசோதனை மைய நிா்வாகிகள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com