செஞ்சி அருகே மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வயலில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் உள்ள மின்சாரம் தாக்கியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், பனப்பாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் ஏ.லட்சுமணன்(26), இவா் திண்டிவனம் சிப்காட்டில் வேலை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்குள்ள கரும்பு தோட்டத்தின் வழியே சென்றபோது, காட்டுப்பன்றியிடம் இருந்து பயிரைக் காப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை தொட்டதில், மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் மின்வேலி அமைத்திருந்த ம.மதன், ஜா. ஏழுமலை ஆகியோா் மீது வழக்கு பதிந்து, மதனைக் கைது செய்தனா். ஏழுமலையைத் தேடி வருகின்றனா்.
