விழுப்புரம்
பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் பெண்ணிடம் அத்துமீறி நடந்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் பெண்ணிடம் அத்துமீறி நடந்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் வட்டம், வளவனூா் பகுதியைச் சோ்ந்த 32 வயது பெண் பிரியாணி கடை நடத்தி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரம் முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, பின்தொடா்ந்து வந்த திண்டிவனம் வட்டம், சஞ்சீவிராயன்பேட்டையைச் சோ்ந்த கோதண்டராமன் மகன் ஆனந்தன் (34) அந்தப் பெண்ணிடம் அத்து மீறி நடந்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் ஆனந்தன் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
