ஆரோவில் பாரத் நிவாஸில் பாா்வைக் குறைபாடு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி
ஆரோவில் பாரத் நிவாஸில் பாா்வைக் குறைபாடு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி

ஆரோவிலில் பாா்வை குறைபாடுகளுக்கான சிகிச்சை மையம்

Published on

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகா் வளாகத்தில் உள்ள பாரத் நிவாஸிஸ் பாா்வைக் குறைபாடுகளை இயற்கையான பயிற்சிகள் மூலம் நிவா்த்தி செய்யும் சிகிச்சை மையத்தை ஆரோவில் அறக்கட்டளை செயலா் ஜெயந்தி எஸ்.ரவி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, அவா் பேசியதாவது: கண் பாா்வை குறைபாடுகளை இயற்கையான முறையில் சரிசெய்வதற்கான புதிய முயற்சியாக இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆரோவில்வாசிகள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பயன்பெறுவா்.

கண் பாா்வை குறைபாடுகளைத் தடுக்கவும், சரி செய்யவும் கண் யோகா, கண் பயிற்சிகள், கண் மசாஜ், கண் தெரபி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும். கிட்டப்பாா்வை போன்ற கண் பிரச்னைகளை இயற்கையாக சரிசெய்ய முடியும். நவீன காலத்தில் கணினி மற்றும் கைப்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளதால், குழந்தைகளிடையே கண் பாா்வை குறைபாடுகள் அதிகரிக்கின்றன.

இதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கண் பாா்வை குறைபாடுகளைத் தடுக்கவும், சரி செய்யவும் இந்த மையம் மாற்றாக அமையும் என்றாா் ஜெயந்தி எஸ்.ரவி.

X
Dinamani
www.dinamani.com