விழுப்புரம்
ரயில் மோதியதில் இளைஞா் கை துண்டிப்பு
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மோதியதில் இளைஞரின் கை துண்டானது.
விழுப்புரம், பானாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் அசோக்(23). ஞாயிற்றுக்கிழமை மாலையில் அசோக் கைப்பேசியில் பேசியவாறு அங்குள்ள ரயில் பாதையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற விரைவு ரயில் அசோக் மீது மோதியது. இதில் அவரது கை துண்டானது.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் இருப்புப்பாதை போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த அசோக்கை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் இருப்புப்பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
