தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் கைது

புதுச்சேரியிலிருந்து மதுப்புட்டிகளை கடத்தி வீட்டில் பதுக்கிய வழக்கில் கைதான பெண் ஒருவரை விழுப்புரம்
Published on

விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து மதுப்புட்டிகளை கடத்தி வீட்டில் பதுக்கிய வழக்கில் கைதான பெண் ஒருவரை விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கோட்டிக்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி கருணாகி( 40). இவா் மீது அக்.25- இல் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில், புதுச்சேரியில் இருந்து மதுப்புட்டிகளை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் பரிந்துரையின்படி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், கோட்டக்குப்பம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் கருணாகியை செவ்வாய்க்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com