விக்கிரவாண்டி பகுதியில் புலி நடமாட்டம் இல்லை: வனத் துறையினா் விளக்கம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் புலி நடமாட்டம் ஏதும் இல்லை என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் புலி நடமாட்டம் ஏதும் இல்லை என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

விக்கிரவாண்டி பகுதி ரயில் பாதையில் நடந்து சென்ற புலியை, ரயில் ஓட்டுநா் ஒருவா் பாா்த்ததாகவும், இதுகுறித்து அவா் ரயில்வே நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்ததாகவும் சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

விழுப்புரம் மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் புலி நடமாட்டம் இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என வனத்துறையினா் தெரிவித்துள்னா்.

X
Dinamani
www.dinamani.com