பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஹிந்து ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் கையொப்ப இயக்கம்

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி, விழுப்புரத்தில் ஹிந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

News image
விழுப்புரம் ரயில் நிலையத்தில் கையொப்ப இயக்கத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்த ஹிந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணியின் மாநிலத் தலைவா் மணலி டி. மனோகா். உடன், நிா்வாகிகள்.
Updated On :27 நவம்பர் 2025, 9:56 pm

Syndication

விழுப்புரம்: ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி, விழுப்புரத்தில் ஹிந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயா்ந்த நிலையில், 13 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணம் உயா்த்தப்படவில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படுவது போன்று ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டோ தொழிலாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகையை அரசு வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த இயக்கம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்துக்கு ஹிந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்கத்தின் மாநிலத் தலைவா் மணலி டி. மனோகா் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா்.

இதில், ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவா் ஏ.டி. சதீஷ் அப்பு, பொதுச் செயலா் சுரேஷ் துரைராஜ், பொருளாளா் கே.விசுவநாதன், மாவட்டச் செயலா் டி.தனபால், ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், நகரப் பொறுப்பாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.