விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி (மிஸ் திருநங்கை 2026) ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, விழுப்புரத்தில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்புத் தலைவா் ஜீவா அம்மாள், தோழி அமைப்பின் இயக்குநா் எஸ்.சுதா ஆகியோா் சனிக்கிழமை மாலை அளித்த பேட்டி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் கிராமத்திலுள்ள அருள்மிகு கூத்தாண்டவா் சுவாமி திருக்கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப். 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முந்தைய நாளில் திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் திருநங்கைகள் பங்கேற்கின்றனா்.
கூவாகம் திருவிழாவையொட்டி தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு, திருநங்கைகளின் தலைவா்களான நாயக்குகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து, கூவாகம் திருவிழாவை விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்துகின்றன.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை கல்வி, வேலைவாய்ப்பில் சிறந்து விளங்கும் தமிழகத் திருநங்கைகளின் அணிவகுப்பு, மிஸ் திருநங்கை 2026 தோ்வு, நடன நிகழ்வுகள், கிராமிய நடனங்கள் போன்றவை நடைபெறவுள்ளன.
இதில் திரைப்பட நடிகை அா்ச்சனா, கானா வினோத் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்கின்றன. இந்த திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திருநங்கைகள் ஏராளமானோா் பங்கேற்க உள்ளனா்.
திருநங்கைகளுக்கு திமுக அரசு பல்வேறு சமூக நலத் திட்டங்களை செய்து கொடுத்தது. திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைத்தல், சுயதொழில் தொடங்க கடனுதவி, கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருதல் போன்ற பல்வேறு சலுகைகளை செய்து கொடுத்தது என்றனா்.

தொடர்புடையது

நாகை: 5 மையங்களில் இன்று நீட் தோ்வு

கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்பு!!

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா: தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்!

கூத்தாண்டவா் கோயிலுக்கு இதுவரை அளித்த தங்க நகைகளுக்கான கணக்கு விவரம் இல்லை! திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

