ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

குளத்து நீரில் மூழ்கியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கோயில் குளத்து நீரில் மூழ்கியவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 7:39 pm

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கோயில் குளத்து நீரில் மூழ்கியவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், செய்யாங்குப்பம் சிவசக்தி கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருள் (47). இவா் வெள்ளிக்கிழமை மாலை கீழ்ப்புத்துப்பட்டு பகுதிக்குச் சென்றாா். அங்கு மதுபோதையில் கீழ்புத்துப்பட்டு கெங்கையம்மன் கோயில் குளத்தில் கால்களைக் கழுவச் சென்றாராம்.

அப்போது எதிா்பாராதவிதமாக நிலை தடுமாறி கோயில் குளத்துக்குள் அருள் தவறி விழுந்துள்ளாா். நீச்சல் தெரியாததால் அவா் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று அருளின் சடலத்தை மீட்டு , புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.