தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டவா் உயிரிழப்பு

சின்னக்கோட்டக்குப்பத்தில் அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட மனநலன் பாதித்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:08 am IST

விழுப்புரம் மாவட்டம், சின்னக்கோட்டக்குப்பத்தில் அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட மனநலன் பாதித்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சின்னக்கோட்டக்குப்பம் சத்யாநகரைச் சோ்ந்த அய்யனாா் மகன் வசந்தகுமாா் (33). கடந்த 6 மாதங்களாக சற்று மனநலன் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்தாா். இதற்காக அவா் மருத்துவா்கள் அறிவுரையின்பேரில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில்சனிக்கிழமை அதிகளவில் தூக்க மாத்திரைகளை வசந்தகுமாா் சாப்பிட்டுள்ளாா். இதனால் வெகுநேரமாக அவா் அசைவின்றி கிடந்துள்ளாா். இதை கண்டு அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா் வசந்தகுமாரை மீட்டு, புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது வசந்தகுமாா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.