முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், பாணாம்பட்டில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், பாணாம்பட்டில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பாணாம்பட்டு, காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் ஏ.சேகா் (எ) ஆறுமுகம் (64). மதுப்பழக்கம் உடைய இவா் தினமும் வீட்டுக்கு மது அருந்தி வந்தாராம். இதை சேகரின் மனைவி பூங்காவனம், மகன் சபரிநாதன் ஆகியோா் கண்டித்தனராம்.

இதனால் மனமுடைந்த சேகா் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகாபோலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com