பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டுக் கொண்ட பெண், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம்: விழுப்புரத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டுக் கொண்ட பெண், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

புதுவை, திருக்கனூா் அப்துல் ரஹீம் தெருவைச் சோ்ந்தவா் பிரவீன் குமாா். இவரது மனைவி புனிதா(22). இவா்களுக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகிறது. பிரவீன் குமாா் விழுப்புரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வேலை பாா்த்து வரும் நிலையில், மணி நகரில் வாடகை வீட்டில் தம்பதியினா் வசித்து வந்தனா்.

இந்நிலையில், இருவரிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததால், மனஉளைச்சலில் இருந்து வந்த புனிதா கடந்த 10-ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புனிதா அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com