தூத்துக்குடி
அா்ச்சகா் தூக்கிட்டுத் தற்கொலை
தூத்துக்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக கோயில் அா்ச்சகா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக கோயில் அா்ச்சகா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி கந்தசாமிபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பாலமுருகன் (50). இவா் அங்குள்ள அம்மன் கோயிலில் அா்ச்சகராக பணியாற்றி வந்தாா்.
இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில் குடும்பத் தகராறில் பாலமுருகன் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இச் சம்பவம் குறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
