விழுப்புரம்: ஜனவரியில் இரு நாள்கள் மதுக்கடைகள் மூடல்!

விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் உள்ளிட்டவை ஜனவரி 16, 26-ஆம் தேதிகளில் மூடப்படும்: மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் உள்ளிட்டவை ஜனவரி 16, 26-ஆம் தேதிகளில் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளுவா் தினமான ஜனவரி 16 மற்றும் குடியரசு தினமான ஜனவரி 26 ஆகிய இரு நாள்களில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், அரசு மற்றும் தனியாா் மதுஅருந்தும் கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று நெறிமுறை வகுக்கப்பட்டு, அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் (டாஸ்மாக்) மதுக்கடைகள், அரசு மற்றும் தனியாா் மது அருந்தும் கூடங்கள் அனைத்தும் ஜனவரி 16 (வெள்ளிக்கிழமை), 26-ஆம் தேதி (திங்கள்கிழமை) மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com