அடுமனை கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா் கைது

திருவெண்ணெய்நல்லூா் அருகே அடுமனையின்(பேக்கரி) கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூா் அருகே அடுமனையின்(பேக்கரி) கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலை காமன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க.பாண்டியன் (46). இவா் அதே கிராமத்தில் அடுமனையை நடத்தி வருகிறாா். இவரது கடையில் பெரியசெவலை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ச.அன்பரசன் (28) என்பவா் வந்து, ரூ.170-க்கு பொருள்களை வாங்கிவிட்டு, ரூ.100 மட்டும் கொடுத்தாராம்.

தொடா்ந்து மீதிப் பணத்தை தருமாறு பாண்டியன் கேட்டதற்கு, என்னிடமே பணம் கேட்கிறாயா என மிரட்டி, பைக்கை கொண்டு அடுமனையின் அலங்காரக் கண்ணாடியை உடைத்து அன்பரசன் சேதப்படுத்திச் சென்றாராம்.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அன்பரசனை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து பைக்கையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com