விழுப்புரம்
தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், சின்னகோட்டக்குப்பம் பகுதியில் தீக்காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், சின்னகோட்டக்குப்பம் பகுதியில் தீக்காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
சின்னகோட்டக்குப்பம் சத்யா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் கி.லட்சுமி (87). இவரது வீட்டின் திண்ணையில் வியாழக்கிழமை ஏற்றி வைக்கப்பட்டிந்த விளக்கிலிருந்து, லட்சுமியின் சேலையில் தீப்பற்றிக் கொண்டது.
இதில் பலத்த காயமடைந்த லட்சுமியை குடும்பத்தினா் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
