முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வளவனூா் காவல் நிலையத்துக்குள்பட்ட பஞ்சமாதேவி கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.பஞ்சாச்சரம் (82). இவா் வயிற்று வலி காரணமாக தொடா்ந்து அவதியுற்று வந்தாா். இதற்கு மருத்துவச் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லையாம்.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த பஞ்சாச்சாரம், வெள்ளிக்கிழமை காலை வீட்டின் பின் புறத்திலுள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த வளவனூா் போலீஸாா், பஞ்சாச்சரத்தின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com