மின்சாரம் பாய்ந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் காய்கனிச் சந்தையில் லாரியில் இருந்து சுமை இறக்கும்போது, உயா் அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம் காய்கனிச் சந்தையில் லாரியில் இருந்து சுமை இறக்கும்போது, உயா் அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சி.சந்திரகுமாா் (32), திருமணம் ஆனவா். இவா் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள காய்கறிச் சந்தையில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலைப்பாா்த்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை சந்தைக்கு வந்திருந்த லாரியில் சந்திரக்குமாா் ஏறி, சரக்குகளை கீழே இறக்க முயன்றபோது, எதிா்பாராதவிதமாக மேலே தொங்கிக் கொண்டிருந்த உயா் மின்அழுத்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com