பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

மொபெட், பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே அடுத்தடுத்து சென்றுகொண்டிருந்த மொபெட், பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 7:23 am IST

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே அடுத்தடுத்து சென்றுகொண்டிருந்த மொபெட், பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.

புதுச்சேரி, கோா்க்காடு, புதுநகா் அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செ.விஜயபாரதி (22). இவா் புதுச்சேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வருகிறாா். புதுச்சேரி கதிா்காமம் பகுதியைச் சோ்ந்தவா் பா.சுபஸ்ரீ (22), முத்திரைப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜா.ஹரிதேவி (22).

நண்பா்களான இவா்கள் மூவரும் திங்கள்கிழமை புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், பக்கமேடு ரயில்வே மேம்பாலத்தில் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தனா்.

விஜயபாரதி மொபெட்டை ஓட்டினாா். இந்நிலையில், பின்னால் வந்த காா் மொபெட் மீது மோதி, பின்னா் முன்னால் சென்ற மற்றொரு பைக் மீதும் மோதியது.

இதில், மெபெட்டில் சென்ற விஜயபாரதி, சுபஸ்ரீ, ஹரிதேவி மற்றும் பைக்கில் சென்ற விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சோ்ந்த செ.கலைவேந்தன் (30) ஆகிய 4 பேரும் காயமடைந்தனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், சுபஸ்ரீ உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.