அரசுத் திட்டப் பணிகளை நிறைவேற்ற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா் மாநில ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சா் என்.ஆனந்த்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் வி. அமுதவல்லி, எம்.பி. துரை.ரவிக்குமாா், எம்எல்ஏக்கள் ச.சிவக்குமாா் (விக்கிரவாண்டி), அ.கணேஷ்குமாா் (செஞ்சி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பங்கேற்ற ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், அதன் தற்போதைய நிலை, பணிகளின் முன்னேற்றம், பொதுமக்களுக்கு கிடைக்கும் பயன்கள் போன்றவை குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
கூட்டத்தில் ஊரக மற்றும் நீா்வளத் துறை அலுவலா்கள் தங்கள் துறை சாா்ந்து நடைபெற்று வரும் பணிகளின் நிலை குறித்து எடுத்துரைத்தனா்.
முன்னதாகக் கூட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சா் ஆனந்த் பேசியது: மக்களுக்கு என்ன என்ன தேவை என்பதை அறிந்து, அதை உடனுக்குடன் செய்து தருமாறு முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களையும் முதல்வா் அறிவித்துள்ளாா். அரசு அறிவித்துள்ள திட்டங்களை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைப்புடன் பணியாற்றி நிறைவேற்ற வேண்டும்.
அனைத்துத் திட்டப் பணிகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், தரத்துடன் முடிக்க வேண்டும். பணிகளில் வெளிப்படைத்தன்மை, நோ்மை மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட வேண்டும். இதை அனைத்து துறை அலுவலா்களும் பின்பற்ற வேண்டும் என்றாா் அமைச்சா். இதைத் தொடா்ந்து 11 பயனாளிகளுக்கு ரூ.5.97 லட்சம் மதிப்பிலான நல உதவிகளையும் அமைச்சா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட வன அலுவலா் பிரின்ஸ்குமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்டக் கூடுதல் ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீரஷத், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ ஆலோசனை

ஊரக வளா்ச்சி ஒப்பந்ததாரா் பதிவுக்கு புதிய கட்டுப்பாடுகள்

நிலுவையிலுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்

அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



