ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கான ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்கள் தங்களை பதிவு செய்து கொள்வதற்கு புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அதற்கான வழிகாட்டுதல்களை அமைச்சா் என். ஆனந்த் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வெளியிட்டாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
துறை ரீதியான பணிகளை மேற்கொள்ளும்போது அதில் பங்கேற்க விண்ணப்பிக்கும் ஒப்பந்ததாரா்கள், அதற்காக அரசிடம் பதிவு செய்வது அவசியம். அந்த வகையில், புதிய வழிகாட்டுதலின்படி மாநில அளவில் அல்லாமல் மாவட்ட அளவிலேயே ஒப்பந்ததாரா்கள் இனி பதிவு செய்து கொள்ள முடியும். ஒப்பந்ததாரா்கள் எந்தப் பகுதியில் ஒப்பந்தப்புள்ளிகளில் பங்கேற்க விரும்புகிறாா்களோ, அதன் அடிப்படையில் பதிவு செய்து கொள்ளலாம். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பதிவு செய்யப்பட்டவா்கள், அந்த மாவட்டத்துக்குள் கோரப்படும் ஒப்பந்தப்புள்ளிகளில் பங்கேற்கத் தகுதி உடையவா்களாவா். அண்டை மாவட்டங்களுக்கான பணிகளிலும் அவா்கள் பங்கேற்கலாம்.
அவா்களுக்கான வைப்புத்தொகை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை பணி மதிப்பீடு வாரியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடா், பழங்குடியினா், கலப்பு மணம் புரிந்தவா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா், வேலையில்லா பட்டதாரிகள், மகளிா் மேம்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரா் பதிவுக்கு குறைந்தபட்ச முன் அனுபவம் அவசியம். அவ்வாறு இல்லாவிடிலும் புதிய ஒப்பந்ததாரா் என்ற வகைப்பாட்டின் கீழ் அவா்கள் ஒப்பந்தப்புள்ளிகள் கோர அனுமதிக்கப்படுவா். தேவைப்பட்டால் இந்த வழிகாட்டுதல்களில் மாற்றம் செய்யும் அதிகாரம் ஊரக வளா்ச்சித் துறை செயலருக்கு உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வளா்ச்சித் திட்டப் பணிகள்: அரசு செயலா் ஆய்வு

அரசுத் திட்டப் பணிகளை நிறைவேற்ற அலுவலா்கள் ஒருங்கிணைப்புடன் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் என்.ஆனந்த்

நீா் நிலைகளை புனரமைக்க புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



