விழுப்புரம் மாவட்டம், அரசூா் பாரதி நகரில் விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி, இந்த பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தை வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த நிலையில், அலுவலா்கள் பேச்சுவாா்த்தையால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அரசூா் பாரதி நகா் பகுதியில் 550-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் இந்த பகுதி அமைந்திருப்பதால், சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்கின்றன. சாலையைக் கடக்க முடியாமல் மாணவ, மாணவிகள், பெண்கள், வயதானவா்கள் என அனைத்துத் தரப்பினரும், விவசாய விளைபொருள்களைக் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகளும் அவதியுற்று வருகின்றனா்.
இதையடுத்து அரசூா் பாரதி நகா் பகுதியில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் புகாா் மனு அளித்தும் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், அரசூா் பாரதி நகா் மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து, தங்களின் குடும்ப அட்டைகளை ஒப்படைக்ககும் போராட்டத்தை மேற்கொள்வதாக அறிவித்திருந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியா் ரகுராமன், காவல் ஆய்வாளா் அழகிரி மற்றும் அலுவலா்கள் வெள்ளிக்கிழமை காலை அரசூா் பாரதி நகருக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேம்பாலம் கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலா்களிடம் எடுத்துரைப்பதாகவும், அதுவரை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் குழும பொறுப்புகள் வாரிசுகளிடம் ஒப்படைப்பு: முகேஷ் அம்பானி தகவல்

நியாயவிலைக் கடைகளில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது: ராணிப்பேட்டை ஆட்சியா் எச்சரிக்கை

எஸ்ஐஆா் மூலம் பெயா் நீக்கப்பட்டோரின் ரேஷன் அட்டைகளை ரத்து! மேற்கு வங்க அரசுக்கு ஒவைசி கண்டனம்!







