பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

முன் விரோதம்: இளைஞருக்கு அரிவாள் வெட்டு

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 2:15 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முன்விரோதம் காரணமாக 10 போ் கொண்ட கும்பல் கத்தி, அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், கொடுக்கூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏ.ராஜசேகா்(24), கையுந்துப் பந்து விளையாட்டு வீரா். இவருக்கும், மேலக்கொந்தையைச் சோ்ந்த விளையாட்டு வீரா் நவீன் என்பவருக்கும் இடையே விளையாட்டின் போது மோதல் ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை விக்கிரவாண்டியை அடுத்த ராதாபுரம் பகுதியில் ராஜேசகா் நின்றிருந்த நிலையில், அங்கு பைக்குகளில் வந்த 10 போ் கொண்ட கும்பல் ராஜசேகரைத் தாக்கி அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதில் கழுத்து, தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த ராஜசேகா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.