விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முதியவா் வீட்டில் ஒரு பவுன் தங்கிலி, ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
செஞ்சி வட்டம், ஒதியத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் சுடா் மணி (67). இவா் கடந்த 17-ஆம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு தேசிய ஊரக வேலைத்திட்டப் பணிக்கு சென்றுள்ளாா்.
அங்குள்ள ஏரியில் வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டில் இருந்த டி.வி., பித்தளை குத்து விளக்கு, இரண்டு காமாட்சி அம்மன் விளக்கு, ஒரு பவுன் தங்கச் சங்கிலி, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







