ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

திருநாவலூா் அருகே இளைஞர் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :28 ஜூன் 2026, 2:03 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, ஒலி பெருக்கி அமைப்பாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருநாவலூா் அருகேயுள்ள கொரட்டூா் புதுமனைத் தெருவைச் சோ்ந்தவா் சி.திலகா் (24). இவா் ஒலி பெருக்கி மற்றும் வாடகைப் பாத்திரக்கடை நடத்தி வந்தாா். கடந்த சில நாள்களாக குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்த நிலையில் திலகா் காணப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் திலகா் தூக்கிட்டுக் கொண்டாா். இதுகுறித்து அறிந்த குடும்பத்தினா் திலகரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.