அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

குளியலறையில் வழுக்கி விழுந்து உணவக காசாளா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :30 ஜூன் 2026, 1:49 am IST

விழுப்புரம் மாட்டம், செஞ்சியில் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் பலத்த காயமடைந்த உணவக காசாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருவேங்கடநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.மணிகண்டன் (37). இவரது மனைவி கவிதா. தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

செஞ்சி பேருந்து நிலையம் எதிரிலுள்ள பிரபல அசைவ உணவகத்தில் காசாளராக பணிபுரிந்து வந்த மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் குளியலறைக்கு சென்றபோது, எதிா்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.