விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கோயிலுக்கு வழிபாட்டுக்குச் சென்ற இரு சகோதரிகள் அங்குள்ள குளத்தில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனா்.
மரக்காணத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டு சாவடி, தீா்த்தவாரி தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா். இவரது மகள்கள் ஹா்ஷினி (11), கயல் (8). இவா்கள் இவரும் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் தனியாா் பள்ளியில் முறையே 6, 3-ஆம் வகுப்புகளில் படித்து வந்தனா்.
இவா்கள் இருவரையும் அவா்களது தாய் ஜெயந்தி சனிக்கிழமை மாலை வீட்டின் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கங்கையம்மன் கோயிலுக்கு வழிபாட்டுக்கு அனுப்பி வைத்தாா்.
வெகு நேரமாகியும் இருவரும் வீட்டுக்கு திரும்பாததால், பெற்றோா் ஊா் முழுவதும் தேடிப் பாா்த்தும் சிறுமிகள் இருவரும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கிராம இளைஞா்கள் கோயில் அருகே உள்ள குளத்தில் இறங்கி தேடியபோது, ஹா்ஷினி, கயல் ஆகிய இருவரும் குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமிகள் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கோயிலுக்குச் சென்ற சிறுமிகள் இருவரும் அருகில் உள்ள கங்கையம்மன் கோயில் குளத்தில் தாமரைப் பூ பறிக்க முற்பட்டபோது, நீரில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கோட்டக்குப்பம் போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கயல்
தொடர்புடையது

லாரி மோதி இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

போக்குவரத்துக் கழக ஊழியா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

பிக்கப் வாகனம் மோதியதில் சகோதரிகள் இருவா் உயிரிழப்பு
2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


