‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பக்ரீத் பண்டிகை: செஞ்சி வாரச் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

News image

செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஆடுகளை வாங்க குவிந்த மக்கள், வணிகா்கள்.

Updated On :23 மே 2026, 12:37 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

செஞ்சியில் கடந்த 150ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்ாகும். இந்த சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. செஞ்சி பகுதிகளில் வளா்க்கப்படும் வெள்ளாடுகள் மலைப் பகுதிகளிலுள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளா்கின்றன.

இந்த ஆடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவண்ணாமலை, கடலூா், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட அருகிலுள்ள மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி செல்வாா்கள் என்பதால் செஞ்சி வாரச் சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக உள்ளது.

வரும் 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பக்ரீத் பண்டிகைக்கு குா்பானி கொடுப்பதற்காக ஏராளமான இஸ்லாமியா்கள் ஆடுகளை வாங்கி செல்வதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கே செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனா். விவசாயிகள் தங்களது வளா்ப்பு ஆடுகளையும், வெளிமாவட்டத்திலிருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்பதற்காக கொண்டு வந்தனா். ஏராளமான வியாபாரிகள் அதை வாங்கிச் செல்வதற்காக வாகனங்களில் வந்திருந்தனா்.

விற்பனைக்காக சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளா்ப்பவா்களும் கொண்டு வந்திருந்தனா். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றன.

இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் 20 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இச் சந்தையில் சுமாா் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.