கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

விழுப்புரம்: குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தது குறித்து...

News image

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் - தினமணி

Updated On :29 மே 2026, 12:39 pm IST

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை (மே 29) வெளிநடப்பு செய்துள்ளனர்.

பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமல் காரணமாக கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மே 29 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கூட்டரங்குக்கு வந்தார். அப்போது விவசாயிகள் கூட்டத்தை நடத்தக் கூடாது என்றும், பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரியும் கூட்டத்தை வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியேறினர்.

மேலும் தலையில் முக்காடு அணிந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு விவசாயிகள் அமர்ந்து முழக்கமிட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து, விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

தலையில் முக்காடு அணிந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு முழக்கமிட்ட விவசாயிகள்.

தலையில் முக்காடு அணிந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு முழக்கமிட்ட விவசாயிகள். - தினமணி

Summary

Farmers staged a walkout from the grievance redressal meeting held at the Villupuram District Collector's office on Friday (May 29).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.