அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண் குழந்தை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், கோட்டேரி கிராமத்தில் ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை முதலுதவி அளிக்கப்பட்டு டிசம்பர் 24-ம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், கோட்டேரி கிராமத்தில் ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை முதலுதவி அளிக்கப்பட்டு டிசம்பர் 24-ம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

இதையடுத்து குழந்தையை தத்து எடுக்கும் உரிமம் பெற்ற சென்னையைச் சேர்ந்த பாலமந்திர் என்ற தொண்டு நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, குழந்தைகள் நலக் குழுத்  தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com