அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 15-ல் ஜமாபந்த

சிதம்பரம் வட்டத்தில் 1422 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற மே 15-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Updated On :13 மே 2013, 12:23 am IST

சிதம்பரம் வட்டத்தில் 1422 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற மே 15-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.

வருவாய் தீர்வாயத்தில் உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் பங்கேற்று மனுக்களைப் பெறுகிறார்.

இது குறித்து சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா தெரிவித்தது: மனு அளிக்க விரும்பும் கிராம மக்கள் தங்களது குறைகளை குறிப்பிட்டு, மனுவின் நகலை வருவாய் தீர்வாயம் நடத்தப்படும் நாட்களுக்கு முன்பாகவே உதவிஆட்சியர் அல்லது சிதம்பரம் வருவாய் வட்டாட்சியருக்கோ மனுக்களை அனுப்பலாம்.

மேற்படி மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு வருவாய் தீர்வாய நாள்களில்  உரிய உத்தரவுப் பிறப்பிக்கப்படும்.அப்படி அனுப்பப்படும் மனுக்களின் தலைப்பில் வருவாய் தீர்வாயத்துக்கான மனு என்ற விவரத்தை தவறாமல் எழுத வேண்டும். இல்லையென்றால் அந்த மனு வருவாய் தீர்வாயத்துக்காக கொடுக்கப்படும் மனுவாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.1422 பசலிக்கான வருவாய் தீர்வாயம் நடைபெறும் கிராமங்கள் விவரம் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலக விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது என வட்டாட்சியர் எம்.விஜயா

தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.