பாரம்பரிய வேளாண் பொருள்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வுப் பேரணி கடலூரில் சனிக்கிழமை நடந்தது.
தொன்றுதொட்டு நாம் பயன்படுத்திய பாரம்பரிய வேளாண் பொருள்கள், நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்தன.மருத்துவத் தன்மைகளைக் கொண்ட அவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தன. நீண்டகாலமாக மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து வந்த பாரம்பரிய வேளாண் பொருள்கள் தற்போது வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன.
பாரம்பரியமிக்க வேளாண் பொருள்கள் பயன்பாட்டை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், இயற்கையின் படைப்பைப் பயன்படுத்தி மக்கள் நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும், விவசாயத்தின் வருமானத்தைப் பெருக்கும் வகையிலும் பாரம்பரிய வேளாண் பொருள்கள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி கடலூரில் நடைபெற்றது.
இதில் பாரம்பரிய வேளாண் பொருள்களான இளநீர், சீயக்காய், பருத்தி, பனை விசிறி உள்ளிட்ட பொருள்களை கைகளில் ஏந்தி மாணவர்களும், விவசாயிகளும் கடலூர் உழவர் சந்தையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேரணியைத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் முன்னிலை வகித்தார்.
நகர்மன்றத் தலைவர் கே.சி. சுப்ரமணியன், வேளாண்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோகன், துணை இயக்குநர் (மாநில திட்டம்) சந்திரமோகன், உதவி இயக்குநர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்
கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









