மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் கடலூரில் சனிக்கிழமை நடந்தது.
கடலூர் மாவட்டத்தில் 37 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்துக்கான சான்றுடன் கூடிய தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்க மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முகாம்கள் நடந்து வருகின்றன.
கடலூர் ஒன்றியத்துக்கு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அமைச்சர் எம்.சி.சம்பத், ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் பார்வையிட்டு மனுக்களை பரிசீலித்து தகுதியின் அடிப்படையில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர வண்டிகளையும், 35 பேருக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான உத்தரவையும் வழங்கினார்.
3 பேருக்கு தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும், உதவி உபகரணங்களையும், மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவும் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு சாதனம், செயற்கைக் கால், கை தேவைப்பட்டவர்களுக்கு அளவுகள் மற்றும் அச்சுகள் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்ரமணியன், துணைத் தலைவர் குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை பழனிச்சாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் ஜெயச்சந்திரன், இணை இயக்குநர் கோவிந்தராஜ், துணை இயக்குநர் ஜவகர்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








