நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காசநோய் ஓழிப்பிற்கு, சிதம்பரம் பள்ளி மாணவர்கள் திரட்டிய ரூ 77 ஆயிரம் நிதி!

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனமான இந்தியன் டெவலப்மெண்ட் நிறுவனம், இந்தியாவில் 17 நகரங்களில் மருத்துவமனை நிறுவி காசநோய, எய்ட்ஸ் ஆகியவற்றிற்கு

News image
Updated On :7 ஏப்ரல் 2014, 2:22 pm

ஜி.சுந்தரராஜன்

காசநோய் ஒழிப்பிற்காக, சிதம்பரம் பள்ளி மாணவர்கள் ரூ.77,120 ரூபாய் நிதியை திரட்டி வழங்கியுள்ளனர்.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனமான இந்தியன் டெவலப்மெண்ட் நிறுவனம், இந்தியாவில் 17 நகரங்களில் மருத்துவமனை நிறுவி காசநோய, எய்ட்ஸ் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்து வருகிறது.

இந்நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும், மாணவர்களிடையே சேவை மனப்பாண்மையை ஊக்குவிக்கும் நோக்கமாக தொடர்ந்து 7 ஆண்டுகளாக அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நிதி திரட்டி அளித்து வருகின்றனர். இந்த ஆண்டு ரூ.77120 நிதியை திரட்டி வழங்கியுள்ளனர்.

பள்ளியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவன மேலாளர் பி.ஸ்ரீராமிடம், திரட்டப்பட்ட நிதியை பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.தர்பாரண்யன் மற்றும் மாணவ, மாணவியர்கள் வழங்கினர். கடந்த 7 ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் ரூ.11 லட்சம் நிதியை திரட்டி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.