டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நீர்நிலைகளை தூர்வாரக் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

நீர்நிலைகளை தூர்வாரக் கோரி மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில் பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :14 செப்டம்பர் 2016, 3:20 am

குடந்தை வய்.மு. கும்பலிங்கம்

நீர்நிலைகளை தூர்வாரக் கோரி மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில் பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 மாவட்ட பாஜக சார்பில் கடலூரில் ஆட்சியரின் பழைய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் கே.சங்கர்கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் மு.சக்திகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 வீராணம் ஏரியை தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும். பெருமாள் ஏரிக் கரைகளை பலப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடலூர் நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டத்தை உடனே அமலாக்குதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
 சிதம்பரம்: இதேபோல் சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் எஸ்.கனகசபை தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.எஸ்.அசோக்பாபு வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.திருமாறன், வர்த்தகப் பிரிவு தலைவர் கே.ஜெயக்குமார், மாவட்டச் செயலர் ஆர்.ஜோதிராஜ், குமராட்சி ஒன்றியத் தலைவர் சி.பழனிராஜா, என்.பரமகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கடலூர் மாவட்டத் தலைவர் தேவ.சரவணசுந்தரம் கண்டன உரையாற்றினார். சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
 தேசிய பொதுக்குழு உறுப்பினர் எஸ்.வி.ஸ்ரீதரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.நடனம்பிள்ளை, ஜி.பாலசுப்பிரமணியன், யு.வெங்கடேச தீட்சிதர், மாநில எஸ்சி அணி செயலர் ஏ.உமாபதிசிவம், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.கோசலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர துணைத் தலைவர் ஆர்.பரந்தாமன் நன்றி கூறினார்.
 பண்ருட்டி: பண்ருட்டியில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகர தலைவர் எஸ்.பச்சையப்பன் தலைமை வகித்து பேசினார்.
 மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம், பண்ருட்டி ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.பி.செல்வம், மாவட்டச் செயலர் சரவணன், கடலூர் மாவட்ட வர்த்தக அணி தலைவர் வினோத், மாநில பிரசார அணிச் செயலர் கோவிந்தராஜ், நகர பொதுச் செயலர் டி.தண்டபாணி, துணைத் தலைவர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 பண்ருட்டி சட்டப் பேரவை தொகுதி பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி பேசினர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.