டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அண்ணா பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை

அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர்

News image
Updated On :16 செப்டம்பர் 2016, 5:38 am

குடந்தை வய்.மு. கும்பலிங்கம்

அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 முன்னாள் முதல்வர் அண்ணாவின் 108ஆவது பிறந்த தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள அவரது சிலைக்கு அதிமுக மாவட்ட அவைத் தலைவர் கோ.ஐயப்பன் தலைமையில், நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அருகிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கும் கட்சியினர் மாலை அணிவித்தனர்.
 நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், ஒன்றியச் செயலர்கள் ராம.பழனிச்சாமி, பி.வி.ஜெ.முத்துகுமாரசாமி, மருத்துவரணி மாநில நிர்வாகி சீனிவாசராஜா, விவசாய சங்கச் செயலர் என்.காசிநாதன், தொழிற்சங்கச் செயலர் பாலகிருஷ்ணன், மீனவரணி செயலர் கே.என்.தங்கமணி, கவுன்சிலர்கள் வ.கந்தன், கே.தமிழ்ச்செல்வன், ஜெ.அன்பு, மகளிரணிச் செயலர் கம்சலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 திமுக சார்பில் மாநில மாணவரணிச் செயலர் இள.புகழேந்தி தலைமையில் அக்கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் தேமுதிக சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 சிதம்பரம்: சிதம்பரத்தில் அதிமுகவினர் நகரச் செயலர் ரா.செந்தில்குமார் தலைமையில் ஊர்வலமாக வந்து வடக்குமெயின்ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
 நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வி ராமஜெயம், பி.எஸ்.அருள் மற்றும் மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட பாசறை செயலர் டேங்க் ஆர்.சண்முகம், முன்னாள் நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட துணைச் செயலர் தேன்மொழி காத்தவராயசாமி, மாவட்ட பிரதிநிதிகள் முத்துராமன், குமார், நாகராஜன், முன்னாள் பேரவைச் செயலர் பன்னீர்செல்வம், நகர அவைத் தலைவர் தில்லை சேகர், அண்ணாமலைநகர் செயலர் முத்தையன், தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட பொருளர் ஆர்.வி.சுவாமிநாதன், நகர எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் கருப்பு ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 பண்ருட்டி: பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுகவினர் நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் நகரச் செயலர் முருகன், துணைத் தலைவர் மல்லிகா, முன்னாள் மேலவை உறுப்பினர் அ.ப.சிவராமன், அவைத் தலைவர் வி.ராஜதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 திமுக சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் கே.நந்தகோபாலகிருஷ்ணன் தலைமையில், நகரச் செயலர் கே.ராஜேந்திரன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். நகர்மன்ற முன்னாள் தலைவர் பச்சையப்பன், மாவட்ட வழக்குரைஞரணி பி.பக்கிரி, தொண்டரணி ஜி.கே.கதிர்காமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 இதேபோல் மாவட்டம் முழுவதும் அண்ணா சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.