மகப்பேறு உதவித் திட்டத்துக்கு ரூ.696 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.சி.சம்பத்
மகப்பேறு உதவித் திட்டத்துக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ.696 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என


மகப்பேறு உதவித் திட்டத்துக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ.696 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கடலூரில் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமை வகித்தார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 800 பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், பூ, வளையல், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, புடவை, பூமாலை அடங்கிய தட்டுடன் சீர்வரிசைப் பொருள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியது: ஏழைப் பெண்களுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் முதல்வரின் உத்தரவின் பேரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்தான உணவு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் ஜெயலலிதா கர்ப்பிணிகள் குழந்தைபெறும் வரை உதவித்தொகை வழங்குகிறார்.
முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை தற்போது ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.696 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.703.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், பொதுமக்கள் அனைவரும் நமது பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, தினை, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்களை உண்ண வேண்டும். இது ஊட்டச் சத்தும், ஆரோக்கியமும் நிறைந்ததாகும் என்றார்.
முன்னதாக பாரம்பரிய உணவுப் பொருள்களின் கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன், துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் எஸ்.மாதவி, மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் பி.ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் வ.கந்தன், ப.சங்கர், ஜெ.அன்பு, கே.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கோ.அன்பழகி வரவேற்க, ச.செல்வி நன்றி கூறினார்.
சிதம்பரம்: இதேபோல, சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர்மன்ற துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெனிபர் புஷ்பலதா வரவேற்றார். பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் பி.அசோகன், சிதம்பரம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் டேங்க் ஆர்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக எம்எல்ஏக்கள் கே.ஏ.பாண்டியன், என்.முருகுமாறன் ஆகியோர் பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு சமூக நலத் துறையின் சார்பில் சீர்வரிசைகளை வழங்கி, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்துப் பேசினர். மருத்துவர்கள் மங்கையர்கரசி, வித்யா, வினோத்ராஜ் ஆகியோர் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
விழாவில் ஒன்றிய அவைத் தலைவர் ராசாங்கம், மாவட்டக் கவுன்சிலர் கர்ணா, செல்வகணபதி, பிரபு, மாவட்ட பிரதிநிதி முத்துராமன், ஜெயலலிதா பேரவை ஜி.வைத்தியநாதன், நிர்வாகிகள் முத்துகுமரன், கார்த்திகேயன், ஆர்.வி.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பண்ருட்டி: பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமத்தைச் சேர்ந்த 530 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா பண்ருட்டியில் நடைபெற்றது. எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். ஒன்றியக்குழு தலைவர்கள் மாலதி கமலக்கண்ணன் (பண்ருட்டி), சுந்தரி முருகன் (அண்ணாகிராமம்), ஒன்றியச் செயலர் என்.டி.கந்தன், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் ராமசாமி, ஆவின் துணைத் தலைவர் செல்வராஜ், அண்ணாகிராமம் ஒன்றிய துணைத் தலைவர் எம்.சி.சம்பந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பண்ருட்டி குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் க.மனோசித்ரா, மேற்பார்வையாளர்கள் குப்பாயி, மார்கமேரி ஆகியோர் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
இதேபோல் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற விழாவில் 480 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...