செம்மண் அள்ளிய ஜேசிபி, இரு டிராக்டர்கள் பறிமுதல்
திட்டக்குடி அருகே பாசிகுளம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி செம்மண் அள்ளியதாக இரு டிராக்டர்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவை புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.


திட்டக்குடி அருகே பாசிகுளம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி செம்மண் அள்ளியதாக இரு டிராக்டர்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவை புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திட்டக்குடி அடுத்துள்ள பாசிகுளம் கிராமத்தில் இரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி செம்மண் அள்ளப்பட்டு வருவதாக திட்டக்குடி வட்டாட்சியர் சிவக்குமாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அந்தப் பகுதியில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, இரவு முழுவதும் கண்காணிக்கப்பட்டது.
இந்த நலையில், புதன்கிழமை அதிகாலை வட்டாட்சியர் அந்தப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக வந்த இரு டிராக்டர் டிப்பர்களை நிறுத்தி, விசாரணை செய்ததில் அரசு அனுமதியின்றி செம்மண் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இரு டிராக்டர்கள், மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு பொக்லைன் இயந்திரத்தைப் அவர் பறிமுதல் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...