குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நோய் பரவும் அபயாம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வார்டு பகுதியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உள்பட்ட மாரியம்மன் கோயில், பேருந்து நிலையம், தாமரைக்குளம், விழப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. வீடுகள், கடைகள் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து வெளியேறும் குப்பைகள் சாலையோரப் பகுதிகளில் கொட்டப்படுவதால், பன்றிகள் வந்து அசுத்தம் செய்கின்றன. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, பன்றிகளைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.